''அன்னை புரியும் அலங்காரம் பார்த்து
என்னதான் அப்படி யோசனை! -கண்ணனே!,
’’ராதை பிறந்தாளா? காதல் புரிவாளா’’?
ஆதலினால் தானே அலுப்பு! ‘’....
அம்மணக் கண்ணன், அலங்காரம் செய்கையில்
கம்மென நிற்பதன் காரணம் -நம்மனம்,
புத்தியை, மாற்றிடும் யுக்தியாம் கீதையை
ஒத்திகை பார்ப்பதற்க் கோ !’’.
வருடம், மாதம், தேதி, நினைவில்லை.... சு.ர இந்த ‘’யசோதா கண்ணனுக்கு அலங்காரம்’’ செய்யும் ஓவியத்தை மெயிலில் அனுப்பியபோது அடியேன் பார்த்த பரவசத்தில் எழுதிய வெண்பாக்கள்....
No comments:
Post a Comment