நாம் கவிதைகளை அதிவேகமாகக் கடந்து சென்றுவிடுகிறோமோ? பேருந்து புறப்படும் நேரத்தை நெஞ்சில் நிரப்பியபடியே பரீ நகரத்து லுவரில் மோனலிஸா ஓவியத்தை ரசிக்க மறந்துவிடும் சுற்றுலாப் பயணிகள் போல்!
கவிதையைக் கடந்து செல்ல முடியுமா? அது என்ன கால்வாயா? கடல், கங்குகரை காணாத கடலப்பா! உறங்க விடாமல் உள்ளத்தில் கனமாக உட்கார்ந்துவிடும், கண்ணீர் பெருக, உள்ளம் உருக, நெகிழ்ந்தால்தான் உயிரை ஊடுருவிச் சென்று அங்கே அது சிலையாக மலர்ந்து ஜொலிக்கும்.
கவிதை படிப்பதற்கு இல்லை, அத்துடன் வாழப் பழக வேண்டும். அதற்குத் துணிவு வேண்டும். முதலில், சு.ரவி போல் சொல்வதென்றால், அமைதி வேண்டும்.
"பிரமன் இங்கு இருக்க ஒட்டான்
பிறப்பெனும் சிட்சை செய்வான்
இரக்கமில் எமனோ என்னை
இவ்விடம் இருக்க ஒட்டான்"
இந்த வரிகள் நெஞ்சில் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டாமா? சுலபத்தில் புரிந்து கொண்டு, சரி, சரி, வருகிறேன் என்று இந்தக் கவிதையிடம் விடைபெற்றுக் கொள்ள முடியுமா? கேசவனைச் சேவகனாக்கிய.சுந்தர நாமாவளியில் இருந்து எளிதில் மீள முடியுமா? கவிதை வெறும் விளையாட்டில்லை. அதுவே பத்ரகாளி, பராசக்தி!
"பிரமன் அங்கு"
ஒரு அட்சரம் அப்படி இப்படி மாற்றமுடியாது சாமி, அதுதான் கவிதை.
******
ஆஹா, உயர்ந்த கவிதை. நேர், நிறை என்ற பொல்லா இலக்கணம் நேர்மை, நிறை எனப்படும் கற்பு. நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம் என்று சீறினானே பாரதி!
புலனழி வதற்கே யோகம்
புனிதமாக் குவதே யாகம்
புலனழித் தொருமை யாக்கிப்
புனிதமும் ஆக்கும் நெஞ்சைக்
களவாடும் ப்ரேம பாவம்
கண்ணனைத் தழுவும் மோகம்
தளராத பக்தி ராதா
ஆண்டாள்மீ ராவின் தாகம்

No comments:
Post a Comment