
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய
அங்கும் இங்கும் எங்குமாய் அமைந்த தேவதேவனே
ஆதியாய் அநாதியாய்ச் சமைந்த சோதி ரூபனே
மங்கலங்கள் யாவும் நல்கு அம்பிகை மணாளனே
மைந்தன் செய்யும் பூசையில் மகிழ்ந்தருள் நடேசனே ஓம்
எந்த இல்லமாயினும் இருந்த இல் சிதம்பரம்
எடுத்த பீடம் ஆலயம் தொடுத்த கூரை கோபுரம்
செந்தமிழ்சொல் மந்திரம் திருந்தும் அன்பே ஆகமம்
சிவந்தபாதம் பங்கயம் உவந்தருள் நடேசனே ஓம்
மன்றிலே எடுத்தகால் என் மனையிலும் எடுத்துவை
மனதிலே நினைந்த நன்மை விரைவிலே முடித்துவை
என்றும் தீமை அணுகிடாமல் ஈசனே தடுத்துவை
ஏத்தும் அன்பர்குழுவில் என்னைச் சேர்த்துவை நடேசனே ஓம்
ஆபயந்த ஐந்தினோடு பால்பழம் பஞ்சாமிர்தம்
ஆலைவாய்க் கரும்பு தெங்குதேன் சுகுந்த சந்தானம்
நீபயந்த யாவையும் நினக்களித்தேன் ஈசனே
நேர்த்தியாய் அனைத்தும்ஆடி வாழ்த்துவாய் நடேசனே ஓம்
No comments:
Post a Comment